விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்-2’ திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா? இதோ..

சீயான் நடிக்கும் வீர தீர சூரன் 2-ம் பாகத்தின் கதை குறித்துப் பார்ப்போம்..
‘சீயான்’ விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்’ படத்தின் 2-ம் பாகத்தை அருண்குமார் இயக்க, எஸ். ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் திரில்லராய் உருவாகிய இப்படத்தில், விக்ரம் காளி என்ற ரோலில் நடித்துள்ளார். அவரது மனைவியாக துஷாரா வருகின்றார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதமே இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு போட்டியாக வணங்கான் படமும் திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்தின் ஷூட் குறித்து இயக்குநர் அருண்குமார், ‘வீர தீர சூரன்’ படத்தில் 15 நிமிடங்களுக்கு சிங்கிள் ஷாட் சீன் ஒன்று இருக்கிறது. அந்த ஷாட் எடுக்க எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அதற்காக தனியாக செட் போட்டு, நடிகர்கள், நடிகைகள் வருவதற்கு முன்பு அசிஸ்டண்ட் இயக்குநர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்களை வைத்து ரிகர்ஷல் பார்த்தோம். அதன் பிறகு நடிகர்களை வைத்து மீண்டும் ரிகர்ஷல் பார்த்தோம். இதையடுத்து தான் படப்பிடிப்பு எடுத்தோம். ஆனால், எடுத்து முடிக்க 10 நாட்கள் ஆனது. எங்களுக்கு நாங்கள் நினைத்த மாதிரியே சீன் கிடைத்து விட்டது. அந்த காட்சியை திரையில் பார்க்கும் போது, ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.
மேலும், படத்தின் கதை பற்றி தெரிவிக்கையில், ‘காளியாக நடித்துள்ள விக்ரம், ஒரு புரோவிஷன் ஸ்டோர் ஓனர். சுருக்கமாக சொல்வதென்றால்.. அன்பான கணவன் மற்றும் அப்பாவைச் சுற்றிதான் கதை நகர்கிறது. காளி கேரக்டர் மறைமுகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும், மர்மமாக பார்க்கும் வேலையும் தான் படத்தின் கதை’ என்றார்.
