நிஜ வாழ்க்கையில் சரக்கை தொட்டுக் கூட பார்க்காத ஐந்து தமிழ் நடிகர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பொதுவாக சினிமாவில் இருப்பவர் பலருக்கும் குடிப்பழக்கம் என்பது சாதாரண விஷயமான ஒன்றாகத்தான் இதுவரை சமூகத்தில் பார்க்கப்பட்டு வருகிறது. குடிப்பழக்கம் இல்லாத நடிகைகளை கை காட்டுவது என்பது அரிதான ஒரு விஷயம் என்று சொல்லலாம்.

நிஜ வாழ்க்கையில் சரக்கை தொட்டுக் கூட பார்க்காத ஐந்து தமிழ் நடிகர்கள்.. சினிமா துறையில இப்படி ஒரு நடிகர்களா? இதோ லிஸ்ட்

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மத்த வாழ்க்கையையும் பறிகொடுத்த நடிகர், நடிகைகள் கூட திரையுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இருக்கையில் நிஜ வாழ்க்கையில் சரக்கை தொட்டுக் கூட பார்க்காத ஐந்து திரையுலக பிரபலங்களும் இருந்துள்ளனர்.

அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. சிவக்குமார் : எம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தே திரையுலகில் நடிகராக இருந்து வரும் சிவக்குமார் நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவராக இருந்து வருகிறாராம்.

2. ஜெய்சங்கர் : எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வந்த இவர் திரைப்படங்களில் கெட்டவராக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவராகவே இருந்துள்ளார்.

3. நம்பியார் : எம்ஜிஆர் சிவாஜி, கணேசன் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்த இவர் தற்போதைய ஹீரோக்களான விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரும் நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் அசைவ உணவையும் சாப்பிட மாட்டார் என சொல்லப்படுகிறது.

4. நடிகர் பிரசன்னா : இன்றைய கால நடிகர்களின் நடிகர் பிரசன்னா நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத மனிதர் என கூறுகின்றனர். நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜ வாழ்க்கையில் சரக்கை தொட்டுக் கூட பார்க்காத ஐந்து தமிழ் நடிகர்கள்.. சினிமா துறையில இப்படி ஒரு நடிகர்களா? இதோ லிஸ்ட்

5. அசோகன் : பழம்பெரும் நடிகரான இவர் படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்திருந்தாலும் மிக வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தவர் என சொல்லப்படுகிறது.