
பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
2 Days Collection of Ponniyin Selvan 2 Movie : தென்னிந்திய சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் 3000 திரவியரங்குகளில் வெளியானது. படம் முதல் நாளில் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த நிலையில் இந்த படம் இரண்டாவது நாளில் 55 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இரண்டு நாள் முடிவில் இந்த படம் ரூபாய் 120 கோடி வரை வசூல் செய்து உள்ளது.

தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.