YouTube video

Yuvan About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. மெலடி கிங் என பெயரெடுத்த இவரின் இசை க்கு லட்சக்கணக்கான மக்கள் அடிமையாகி உள்ளனர்.

தற்போது இவர் தல அஜித்தின் வலிமை மட்டுமல்லாமல் மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது ஒருவர் வலிமை என்னாச்சு என கேட்க வலிமை படத்தின் பின்னணி இசை பயங்கரமாக இருக்கும்.

தற்போது லாக் டவுன் காரணமாக வேலைகள் தடைப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். மேலும் இவர் நம்பர் தல என இந்த பதிவில் கூறியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

என் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இவர்கள் தான் சரியான ஹீரோ – சின்ன தல சுரேஷ்ரெய்னா ஓபன் டாக்!

அதன் பின்னர் இன்னொரு ரசிகர் விஜயுடன் எப்போது பணியாற்றுவீர்கள் என கேட்டுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா அவருடன் பணியாற்ற நான் தயாராக உள்ளேன் வாய்ப்பு வந்தால் உடனே செய்து விடலாம் என கூறியுள்ளார்.

மேலும் இதை தனக்கு பல நேரங்களில் ஊக்கம் அளித்ததாகவும் கூறி உள்ளார். இவர்கள் இருவரும் புதிய கீதை படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பின்னர் மீண்டும் இந்த கூட்டணி அமையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.