
என் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த இவர்கள் தான் சரியான ஹீரோ என சின்ன தல சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
Suresh Raina About His Biopic : இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் சுரேஷ் ரெய்னா. இவரை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சின்ன தல என கொண்டாடி வருகின்றனர்.
தல தோனிக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் பலரும் விரும்பும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் ஹீரோவாக யார் நடித்தால் சரியாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு சுரேஷ் ரெய்னா துல்கர் சல்மான் அல்லது ஷாகித் கபூர் நடித்தால் சரியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் உங்களின் கருத்தென்ன என அதே ரசிகரிடமே கேட்டுள்ளார்.
அதற்கு அந்த ரசிகர் துல்கர் சல்மான் மிகச் சரியாக இருப்பார் என பதிலளித்துள்ளார்.