Arjun Das Revealed Master Secrets
Arjun Das Revealed Master Secrets

மாஸ்டர் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனால் இதுதான் இந்திய அளவில் ட்ரெண்டிங் காக இருக்கும் என மாஸ்டர் டயலாக் குறித்த சீக்ரெட்டை உடைத்துள்ளார்.

Arjun Das Revealed Master Secrets : தமிழ் சினிமாவில் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டி இன்று முன்னணி நடிகராக உச்சம் பெற்றிருப்பவர் தளபதி விஜய். என்னதான் தன் அப்பாவின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய வெற்றிக்கு அவரே காரணம்.

ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்த விஜய் அதன்பின்னர் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். கில்லி, சிவகாசி, திருப்பாச்சி என கிராமத்து கதையாக சென்று கொண்டிருந்த விஜய்க்கு முருகதாஸால் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

தளபதியே இதுக்கு ட்ரெய்னிங் எடுக்கணும்.. வாத்தி கம்மிங் பாட்டுக்கு Eye Brow டான்ஸ் ஆடிய முன்னணி நடிகர் – இணையத்தை கலக்கும் வீடியோ!

துப்பாக்கி படத்தில் இருந்து ஸ்டைலிஷ் ஹீரோவாக கலக்க தொடங்கிய விஜய் இன்று வரை அப்படியே மிரட்டி வருகிறார்.

அட்லி இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறினார். இன்று வரை தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்க் ஆகவே இருந்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக வேண்டிய இந்த படம் தற்போது பரவி வரும் வைரஸ் தொற்றால் தள்ளிப் போனது.

அஜித் விட்ட வாய்ப்பால் தான் நான் சினிமாவிற்கு வந்தேன் – ஓபனாக பேசிய தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ.!

இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் டிரைலருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் லைவ் சாட் வீடியோவில் மாஸ்டர் ட்ரைலர் நிச்சயம் மாஸாக இருக்கும் என கூறினார்.

மேலும் இந்த ட்ரெய்லரில் விஜய் சாரின் டயலாக் ஒன்று உள்ளது அது நிச்சயம் இந்திய அளவில் செம ட்ரெண்டிங்காக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அது என்ன டயலாக் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.