நடிகர் யோகி பாபுவின் மனைவி என புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய் என உச்ச நட்சத்திரங்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு.

ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து விட்ட இவரது மனைவி என்ற பெயரில் போட்டோ ஒன்று சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹலோ பக்கத்தில் யோகி பாபுவின் பெயரில் அவளும் நானும் என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் யோகி பாபுவின் மனைவியா இது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு யோகி பாபுவின் பதில் எதுவும் பதிவாகவில்லை. மேலும் இதில் கவனிக்க வேண்டிய விசியம் என்னவென்றால் அந்த கணக்கு யோகி பாபுவின் அதிகாரபூர்வ கணக்கு இல்லை என்பது தான். இதனால் இது பொய்யாகவும் இருக்கலாம்..

தீயாக பரவி வரும் இந்த புகைப்படத்திற்கு யோகி பாவு தகுந்த விளக்கம் கொடுத்தால் தான் உண்மைக்கு என்ன என்பது தெரிய வரும்.

நாம் கூறிய படியே இது பொய் என யோகி பாபு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Yogi Babu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.