மிஸ்டர் மனைவி சீரியலில் புதிய அஞ்சலியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Mr Manaivi Anjali Character Replacement Update : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மிஸ்டர் மனைவி. இந்த சீரியலில் நாய்களை நினைத்து வந்தார் ஷபானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான இவர் இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக ஷபானா அறிவித்திருந்த நிலையில் தற்போதைய இந்த சீரியலில் நடிக்கப்போவது யார் என்று தெரிய வந்துள்ளது.
வானத்தைப்போல சீரியலில் சின்ராசு காதலியாக நடித்த நடிகை தேப்ஜானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.