Wimbledon 2019 :
Wimbledon 2019 : லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றுக்கான 2வது போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார்.
லண்டனில், நடப்பு ஆண்டின் 3வது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் வரும் ஜூலை 1-14ல் நடக்கிறது.
உலக வில் வித்தை போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றுக்கான 2வது போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், போலந்தின் கமில் மஜ்சர்ஜாக் பலபரிட்சை செய்தனர்.
‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த ராம்குமார், 2வது செட்டை 3-6 எனக் தோல்வி கண்டார். ஒரு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ராம்குமார் 6-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.