வேட்டையன் படம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து கலக்கி வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இயக்கத்தில், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், அமிதாப்பச்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் மனசிலாயோ பாடல் வெளியாகி மக்களை கவர்ந்தது.
மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்போம் பட குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அனிருத் வேட்டையன் படம் குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் அதில், ரஜினி சாரின் திரையுலக வாழ்க்கையில் வேட்டையன் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ரஜினி சார் மனசிலாயோ பாடலை மலேசியா வாசுதேவன் வாய்ஸில் இருந்தால் நல்லா இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது ஏ ஐ தொழில் நுட்பம் மூலமாக உருவாக்க எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. இது வலுவான கதை என்றும் இந்த கதையின் ரீச் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.