மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கப் போவது யார் என்ற தகவலை வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, சந்திரமுகி, யாரடி நீ மோகினி, வில்லு, ஆதவன், ராஜா ராணி, நானும் ரவுடிதான், நெற்றிக்கண் அண்ணாத்த என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அனைவருக்கும் தெரியும்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப் போவதாக இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்திருந்தது. இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா அம்மனாக நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பு வடக்கு வெளியிடாமல் இருந்தது.
ஆனால் தற்போது ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.