‘பிசாசு 2’, ‘மனுஷி’ படங்கள் எப்போது ரிலீஸ்? – நடிகை ஆண்ட்ரியா ஓப்பனாக அளித்த பதில்!

Web Ads

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘மனுஷி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகியும் இன்னும் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன.

குறிப்பாக, ‘பிசாசு 2’ திரைப்படம் சில ஆண்டுகளாகவே ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது. ‘மனுஷி’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களைக் கடந்தும் இன்னும் வெளிவராமல் உள்ளது.

சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம் இந்தப் படங்களின் தற்போதைய நிலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்:

“இந்தப் படங்களின் ரிலீஸ் குறித்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. இரண்டு படங்களுமே தற்போது தயாரிப்பாளர் தரப்பில் உள்ள சிக்கல்கள் காரணமாகவே தள்ளிப்போகின்றன. இந்தப் படங்களை யாராவது முன்வந்து ரிலீஸ் செய்தால் எனக்கு மகிழ்ச்சிதான். இரண்டு படங்களுமே வெளியீட்டிற்குத் தயாராகத் தான் இருக்கின்றன” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

தற்போது ஆண்ட்ரியா, வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.