ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நாளைக்கு நான் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

VJ Bhavana in One Day Salary : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தொகுப்பாளினி பாவனா.

இன்றைய ராசி பலன்.! (2.12.2021 : வியாழக் கிழமை)

இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கூட இவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இதற்காக இவர் ஒரு நாளைக்கு ரூபாய் ஒரு லட்சம் சம்பளமாக வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

GV.Prakash ஓட Bachelor படம் பார்த்தேன்! – ஆரி சொன்ன முதல் Review

மேலும் இவர் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடிய போதே உங்களை ஃபேவரிட் தொலைக்காட்சி சேனல் எது என கேட்டதற்கு விஜய் டிவி எனக்கு பேரையும் புகழையும் மக்களிடத்தில் பிரபலத்தையும் தேடிக் கொடுத்தது. ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் எனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்துள்ளது. ஆகையால் என்னுடைய ஃபேவரைட் என்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் தான் என கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் என்று சொன்னால் யார் தான் இப்படி சொல்ல மாட்டாங்க என ரசிகர்கள் சிலர் இவருடைய இந்த பதிலை கிண்டலடிக்கவும் செய்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.