‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா பாலியல் புகார்: இயக்குனர் சரோஜ் மிஸ்ரா கைது
கும்பமேளாவில் காந்த கண்களால் வைரலான மாலை விற்ற பெண் மோனாலிசா என்பது தெரிந்ததே. இவருக்கு சினிமா வாய்ப்பளித்த பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, தற்போது பாலியல் ரீதியாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய சனோஜ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர்.
அந்த பெண் கொடுத்துள்ள புகாரில், நடிகையாக வாய்ப்பு கேட்டு வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் தான் டெல்லி போலீசார் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். இதன் மூலம் மோனாலிசாவின் சினிமா வாழ்க்கை பாதியிலேயே முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சனோஜ் மிஸ்ரா மீது கூறப்படும் குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அப்பாவி பெண் மோனாலிசாவுக்கு சினிமா வாழ்க்கையின் ஆசையை காட்டி வாழ்க்கையை கெடுக்க வாய்ப்புள்ளது என வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி, ஒரு கிராமத்து பெண்ணை நகரத்திற்கு வரவழைத்து, இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர், வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இவர், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல ஹோட்டல்களுக்கு தன்னை வரவைத்து, பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்று புகார் அளித்துள்ளார். மேலும், இதன் காரணமாக பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சில ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இந்த தீவிர குற்றச்சாட்டை நிராகரிக்க இயக்குனரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என கூறப்படுகிறது. மேலும், இயக்குனரின் வாதத்தை ஏற்க முடியாது எனவே, முன்ஜாமீன் வழங்கினால் வழக்கை திசைதிருப்ப வாய்ப்புள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறி சனோஜ் மிஸ்ரா ஜாமீன் கேட்டு தொடர்ந்த வாழ்க்கை நிராகரித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் சனோஜ் மிஸ்ரா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், அந்த பெண்ணுடன் சம்பந்தம் இருந்தது’ என்றார். மேலும், உறவில் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
அந்த பெண்ணை ஏமாற்றும் முயற்சி எதுவும் நடைபெற வில்லை. ஜாமீன் வழங்குவதற்கு எவ்வித ஆட்சேபனை இல்லை என்று அந்த பெண் கூறியுள்ளதாக இயக்குனர் சனோஜ் மிஸ்ராவின் வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். ஆனால் நீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்கவில்லை.
சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், ‘அப்பாவிப் பெண் மோனாலிசாவுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கும் சனோஜ் மிஸ்ரா மீது பலர் சந்தேகம் உள்ளதாகவும் கருத்து கூறி வருகின்றனர்.
முன்னதாக, கும்பமேளா நிகழ்ச்சியில் மோனாலிசா வைரலானபோது, மோனாலிசாவுக்கு சனோஜ் மிஸ்ரா சினிமா வாய்ப்பு தருவதாக சொன்னார். அப்போது, இணையவாசிகள் ‘வேறு இயக்குனரின் படத்தில் மோனாலிசா நடிக்கலாம்’ என கருத்துகள் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.