இரவு நேரத்தில் பைக்கில் கீர்த்தியுடன் தனுஷ் டிராவல்: வைரலாகும் நிகழ்வுகள்
சில வருடங்களாக அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் தனுஷ் தன்னை மிக பிஸியாக வைத்திருக்கிறார். அவ்வகையில் அவரது பாலிவுட் ஷுட் அப்டேட் பற்றிப் பார்ப்போம்..
தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் முடிவடைந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெஸ்க் (Tere Ishk Mein) படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றதை அடுத்து, தற்போது டெல்லியில் லவ் சீன் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தனுஷ்-கீர்த்தி சனோன் இருவரும் பைக்கில் போகும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
முன்னதாக, தனுஷ் இந்தியில், கடந்த 2013-ல் வெளியான ‘ராஜண்ணா’ மற்றும் ‘அத்ராங்கி ரே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் நடிக்கும் மூன்றாவது பாலிவுட் படமான ‘ தேரே இஸ்க் மெயின்’ இவர் நடிப்பில் வெளியான ‘ராஜண்ணா’ படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது. பகலில் ஷூட்டிங் நடத்தினால் கூட்டம் கூடிவிடும் என்பதால், நைட் ஷுட் எடுப்பதாக சொல்லப்படுகிறது.
சேகர் கமுலா இயக்கிய ‘குபேரா’விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனையடுத்து ‘ஸ்ட்ரீட் பைட்டர்’, என்கிற படத்திலும் கமிட் ஆகியுள்ளார். தொடர்ந்து, தனுஷ் ரொம்ப பிஸியாக தன்னை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.