‘ஜனநாயகன்’ படத்துக்காக விஜய்யின் நியூ லுக்: ரசிகர்கள் குஷி..

Web Ads

‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..

விஜய் நடிப்பில் அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.

விஜய்யின் கடைசிப் படம் என்பதால், செம கமர்ஷியலாக இருக்கும் என சொல்லப்பட்டது. இப்படத்திலிருந்து வெளியான டைட்டில் போஸ்டர்களை பார்க்கும்போது, இது அரசியல் படம் என்றே கணிக்கின்றனர். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த ஒரு படமாகவே ஜனநாயகன் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்துடன் விஜய் நடிப்பில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கின்றார்.

தேர்தல், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி மாதம் திரையில் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகின்றது. தற்போது ஹெச்.வினோத் பிளாஷ்பேக் காட்சிகளை படமாக்கி வருகிறார்.

இதற்காக, விஜய் தன் கெட்டப்பை டோட்டலாக மாற்றியிருக்கிறார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது வின்டேஜ் விஜய்யை பார்ப்பதைப் போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

‘செம மாஸாக இருக்கும் இந்த லுக், பிளாஷ்பேக் போர்ஷனின் ஹைலைட்டாக இருக்கும்’ என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

vintage vijay look in hi last movie jananayagan
vintage vijay look in hi last movie jananayagan