தளபதி விஜய் போஸ்டரில் பட்டாசை வைத்து வெடிக்க வைத்து அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பிகில் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு பகுதியில் யாரோ ஒருவர் விஜயின் போஸ்டரில் பட்டாசு வைத்து அந்த போஸ்டரை சிதைக்க வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இதனை வீடியோவாக வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் கடுமையான விமர்சனம் செய்து அந்த நபரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
#HappyDeepavali Guys !! pic.twitter.com/3GAVtS5iGh
— Trollywood (@TrollywoodOffl) October 27, 2019