பாக்யாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் ராதிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராமமூர்த்தி என்ற கதாபாத்திரம் இறந்து போவதாக அறிவித்து கடந்த ஒரு வாரமாக சீரியல் பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தது.
இந்த வாரத்தில் தான் சீரியல் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் வேட்டையன் படத்தில் இருந்து வெளியான “மனசில்லாயோ”என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் மாமனார் இறந்து ஒரு வாரம் தான் ஆகுது மருமகள்கள் போடும் குத்தாட்டத்தை பாருங்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.