பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட் நிறைவு

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..

விஜய் சேதுபதி தற்போது காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தப் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

டத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். யோகி பாபு, செம்பன் வினோத் ஜோஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் தொடர்பாக அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளிவரும் என எதிர்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி-நித்யா மேனன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.