புரொமோஷன் பணியின்போது, மூத்த நடிகையின் காலில் விழுந்த ஜோதிகா
மூத்த நடிகையிடம், காலில் விழுந்து ஜோதிகா ஆசிர்வாதம் பெற்றுள்ளார் ஜோதிகா. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
பாலிவுட் படங்களில் பிஸியாகி வரும் ஜோதிகா தற்போது ‘டப்பா கார்டெல்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதன் புரமோஷன்களில் பங்கேற்று வரும் ஜோதிகா, மூத்த நடிகை ஷபனா ஆஸ்மியை சந்தித்து, அவரது காலைத் தொட்டு வணங்கியுள்ளார்.
‘டப்பா கார்ட்டெல்’ வெப் தொடரில் சபானா ஆஸ்மி, ஜோதிகா மட்டுமின்றி அஞ்சலி ஆனந்த், ஷாலினி பாண்டே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப்தொடர் பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிகழ்வு வைரலாகி வருகிறது.
ஜோதிகா, குடும்பத்துடன் மும்பையில் செட்டிலானது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.
முன்னதாக தன்னுடைய குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் செட்டிலானதாக கூறியிருந்தார். இதையே சூர்யாவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், மும்பையில் உள்ள பள்ளிகளில் அதிகமான மொழிகளை கற்கும் வசதி உள்ளதாகவும், மேலும் வயதான தன் அம்மா, அப்பாவை கவனிப்பதற்காகவும் அதனால்தான் மும்பையில் செட்டிலாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.