விஜய்யின் ‘கில்லி’ பட ரீமேக்கில் பிரதீப்: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து ஆர்வம்
விஜய்யின் மாஸ் படமான ‘கில்லி’ ரீமேக்கில் பிரதீப் நடிப்பது குறித்த தகவல் பார்ப்போம்..
பிரதீப் நடிப்பில் ‘டிராகன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சொன்ன தகவல் வைரலாகி தெறிக்கிறது. இது பற்றிப் பார்ப்போம்..
இயக்குனர் அஷ்வத் கூறியதாவது: விஜய்யின் ‘கில்லி’ படம் ரொம்ப பிடிக்கும். அப்படத்தை ரீமேக் செய்ய விருப்பம். அதில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ரீமேக் செய்யலாம் என ஆர்வம்.
கில்லி படத்தில் காமெடி போர்ஷன்ஸ் நிறைய இருக்கும். அது நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கும். பிரதீப்பிற்கும் காமெடி வரும் என்பதால், அவரை வைத்து ‘கில்லி’ படத்தை ரீமேக் செய்ய ஆசையாக இருக்கிறேன்’ என்றார்.
இந்நிலையில், ‘டிராகன்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ‘மீண்டும் நானும் பிரதீப்பும் இணைவோம். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் அந்த படத்தையும் தயாரிக்கும்’ என தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், சிம்புவின் STR-51 படத்திற்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
‘அப்டியே.. கில்லியையும் சொல்லி வச்சமாதிரி அடிங்க’ என்கின்றனர்’ திரை ஆர்வலர்கள்.