Vijay Reply to Student Questions

மகன், மகளை பற்றி மாணவி கேட்ட கேள்விக்கு வெட்கப்பட்டு பதில் அளித்துள்ளார் நடிகர் விஜய். இதுகுறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Vijay Reply to Student Questions : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். திரையுலகில் தன்னுடைய தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மூலமாக அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய திறமையால் இன்று உச்ச நடிகராக இடம்பிடித்துள்ளார். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

தன்னுடைய ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஜய். இவருக்கு சஞ்சய் என ஒரு மகனும் திவ்யா சாஷா என ஒரு மகளும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சஞ்சய் தற்போது வெளிநாட்டில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை பயின்று வருகிறார். திவ்யா சாஷா தற்போது பள்ளிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். விஜய் மகன் சஞ்சய் விரைவில் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார் தகவல் வெளியாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தநிலையில் விஜய் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் மற்றும் மகள் குறித்து மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு வெட்கப்பட்டு பதில் அளித்த அரிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது அந்த மாணவி சஞ்சய் மற்றும் திவ்யாவின் புகைப்படங்களை எங்களுக்கு எப்போது காட்டப் போகிறீர்கள்?? சஞ்சய் யாருடைய ரசிகர் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த தளபதி விஜய் அவர்கள் இருவரும் உங்களைப் போல சகமாணவர்கள் ஆக பள்ளியில் படிக்க வேண்டும் என்பதால் அவர்களுடைய புகைப்படங்களை வெளியிடவில்லை என கூறியுள்ளார். மேலும் சஞ்சய் மாறிட்டே இருப்பார். ஒருநாள் என்னுடைய ரசிகர் என்று கூறுவார் இன்னொரு நாள் மாற்றி கூறுவார் அவர் யாருடைய ரசிகர் என எனக்கு தெரியாது என்று பேசியுள்ளார். திவ்யா சாஷா நாட்டி கேர்ள். எல்லாரும் வீட்டிலும் இரண்டாவது மகள் எப்போதும் நாட்டி தான். என் மகளும் அப்படித்தான் என பேசியுள்ளார். இந்த அறிவு வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.