தமிழ்த்திரையில், ஜெயம் ரவி முன்னணி நடிகராக வலம் வருபவர்.பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆளுமையாய் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இயக்குனர் ராஜேஷ் எம். இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் ‘ பிரதர்’ (Brother). இதில், ஜெயம் ரவி நாயகனாக நடித்திருக்கிறார்.
இறுதியாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான “சைரன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஜெயம் ரவி, இப்போது தொடர்ச்சியாக தனது மூன்று திரைப்படங்களை வெளியிட தயாராக இருக்கிறார்.
அதில், “ஜீனி” மற்றும் “காதலிக்க நேரமில்லை” ஆகிய இரண்டு திரைப்படங்கள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், பிரபல இயக்குனர் ராஜேஷ் எம்.இயக்கத்தில் உருவாகியுள்ள “பிரதர்” என்கின்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்பொழுது, அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில், பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை பிரியங்கா மோகன், ஜெயம் ரவிக்கு நாயகியாக நடித்திருக்கிறார்.
மற்றும் பூமிகா, சரண்யா பொன்வண்ணன், சீதா, வி.டிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நடராஜன், பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.
எதிர் வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சிறந்த நடிகர் ஜெயம் ரவி. அவர், எண்ணிய கனவெல்லாம் மெய்ப்பட வேண்டும்; மேன்மையுற வேண்டும் வாழ்த்துகள், என்கின்றனர் நெட்டிசன்கள்..!