வனிதா விஜயகுமாருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் திருமணமா? என்ற தகவல் வெளியாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார். இவரது மகளான வனிதா விஜயகுமார் தமிழில் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து காக்கைச் சிறகினிலே,நான் ராஜாவாக போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார். கடந்த சீசனில் இவரது மகள் ஜோவிகா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது முன்னாள் கணவரான ராபர்ட் மாஸ்டருடன் வனிதா விஜயகுமார் ப்ரப்போஸ் செய்வது போன்ற புகைப்படமும் அதில் சேவ் தி டேட் அக்டோபர் 5 என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.
மேலும் ராபர்ட் மற்றும் வனிதா இருவரும் படம் ஒன்றில் இணைந்து நடித்திருப்பதால் ஒருவேளை அந்த படத்திற்கான அப்டேட் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியாகப் போகுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. எனவே எந்த தகவலாக இருந்தாலும் அக்டோபர் ஐந்தாம் தேதி வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.