Vignesh Shivan Blasted Reply to Fan
Vignesh Shivan Blasted Reply to Fan

தன்னுடைய மாமியாருக்கு அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவனை ரசிகர் ஒருவர் திட்ட அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Vignesh Shivan Blasted Reply to Fan : நேற்று அன்னையர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களது அம்மாக்களுக்கு வாழ்த்துக் கூறி அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா அம்மாவுடைய புகைப்படத்தை பதிவேற்றி அன்னையர் தின வாழ்த்துக் கூறி இருந்தார்.

என்ன பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா? அஜித்தின் பிறந்த நாளுக்காக இளம் இயக்குனர் வெளியிட்ட மரண மாஸ் வீடியோ.!

நயன்தாராவின் அம்மாவுக்கு வாழ்த்து கூறுவதற்கு முன்பாகவே விக்னேஷ் சிவன் தன்னுடைய அம்மாவிற்கும் தன் குழந்தையின் வருங்கால அம்மாவான நயன்தாராவிற்கும் வாழ்த்துக் கூறினார்.

இதையெல்லாம் கவனிக்காத ரசிகர் ஒருவர் அவர் தன் வருங்கால மாமியாருக்கு வாழ்த்துக் கூறிய போது அட நார பயலே உன் அம்மாவுக்கு வாழ்த்து சொல்லுடா என திட்டினார்.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் ஆல்ரெடி சொல்லிட்டேன் ப்ரோ உங்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களை போன்று ஒழுக்கமும், நல்ல உள்ளமும் கொண்டவரை பெற்றெடுத்தவரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Vignesh Shivan Blasted Reply to Fan
Vignesh Shivan Blasted Reply to Fan