விடுதலை 2 : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!
விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் விடுதலை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கென்கருனாஸ், கிஷோர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்றே சொல்லலாம்.
அந்த வகையில் தற்போது முதல் நாளில் இந்த திரைப்படம் உலக அளவில் 12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் வார இறுதி நாட்கள் என்பதால் வசூலில் அதிகம் முன்னேற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.