Vidhya Balan

Vidhya Balan : கோடி கோடியாய் சம்பளம் கொடுத்தும் விஜய் படத்தை வேண்டாம் என நிராகரித்துள்ளார் வித்யா பாலன். இதற்கான உண்மை என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை வித்யா பாலன். இவர் தற்போது முதல் முறையாக தமிழில் தல அஜித்துக்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் பட விழாவுக்கு மோசமான உடையில் வந்த ரம்யா – இதை நீங்களே பாருங்க.!

மேலும் இவருக்கு ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக சம்பளமாக ரூ 24 கோடி பேசப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் வித்யா பாலன் இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொள்ளவில்லை. காரணம் அவர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் இந்த படத்திற்க்கு கால் சீட் ஒதுக்க முடியவில்லை.

தமிழகத்தில் விஸ்வாசத்தின் ஷேர் – அஜித் மட்டுமே படைத்த சாதனை.!

அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு மற்றொரு முன்னணி நடிகையான கங்கனா ரெனாவத்திற்கு சென்றுள்ளது. தலைவி படத்தை விப்ரி நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.