vidamuyarchi movie release date details
vidamuyarchi movie release date details

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரெஜினா ,திரிஷா ,அர்ஜுன் சர்ஜா, ஆரவ், ப்ரியா பவானி சங்கர், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் விடாமுயற்சி நவம்பர் 14 அல்லது டிசம்பர் 20ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.