வாழ்க்கை என்பது வாழ்வதற்கே; இதில், சாமான்யனும் சகாப்தம் படைத்தவனும் சரி சமம்.! இல்லறம் தானே, நல்லறம் அதை புரிந்து வாழ்வித்து வாழ்ந்தால் நலம் தானே.!
இந்நிலையில், தமிழ் சினிமாவில், நடிகர் ஜெயம் ரவியின் போகன் உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ள டாரத்தி ஜெய், அளித்த பேட்டியில், தனக்கு ஏற்பட்ட விவாகரத்து குறித்தும் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்தும் பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.
சமீப காலமாக அதிகம் விவாகரத்து நடக்க காரணமே பெண்களும் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்தது தான். அந்த காலத்தில் ஆண்கள் அடித்தால் கூட, கணவர் என அடக்கி வாசித்துக் கொண்டு பெண்கள் அடங்கி இருப்பார்கள். ஆனால், சொந்தக் காலில் இருக்கும் இன்றைய காலத்து பெண்கள் அதற்கு எல்லாம் சகித்துக் கொள்ளாமல் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வருகின்றனர்.
வாழ்க்கை துணை என்பது, நம்மை கெளரவமாக நடத்தவில்லை என்றால், அவருடன் இணைந்து வாழ்வதில் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை என டாரத்தி விஜய் கூறியுள்ளார்.
ஜெயம் ரவி- ஆர்த்தியின் விவாகரத்து தொடர்பான கேள்விக்கு, அது அவர்கள் இருவரது தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் எந்தவொரு கருத்தையும் கூற விரும்பவில்லை. தொழில் ரீதியாக ஜெயம் ரவியை பொறுத்தவரையில் ரொம்பவே ஜென்டில்மேன். அனைவரிடத்திலும் அன்பாகவும் கனிவுடனும் பேசக் கூடியவர்.
முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் போதே, அவருடைய நல்ல குணம் புரிந்து விட்டது எனக் கூறியுள்ளார்.
எது எப்படியோ, உண்மை விரைவில் தெரிய வரும், உலைமூடியை மூடுனாலும், ஊர் வாயை மூட முடியாது தானே.!