தமிழ் சினிமாவில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்றும் ஒரு காமெடி மன்னனாக வலம் வந்து கொண்டிருப்பவர் வடிவேலு என்பது யாவரும் அறிந்ததே.
குணச்சித்திரம் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்த அவரை, முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைகளத்தில், இயக்குனர் மாரி செல்வராஜ் “மாமன்னன்”. திரைப்படத்தில், அதுவரை வடிவேலு மேலிருந்த ஒட்டுமொத்த பிம்பத்தையும் தலைகீழாக மாற்றியது. பல ஆண்டுகள் தடைக்கு பிறகு, மீண்டும் திரையுலகில் களம் இறங்கிய நடிகர் வடிவேலுவுக்கு மலர்ச்சி கொடுத்த திரைப்படமே அது தான்.
இந்நிலையில், பிரபல இயக்குனர் சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகி வரும் “கேங்கர்ஸ்” என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். ,அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதுமட்டுமல்ல, அவருடைய மற்றொரு படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அசத்திய தயாரிப்பு நிறுவனம் தான் ஆர்.பி சவுதிரியின் “சூப்பர் குட் பிலிம்ஸ்”. தற்பொழுது மீண்டும் தமிழ் திரை உலகில் “மாரீசன்” என்கின்ற திரைப்படத்தை தயாரித்து, தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி ஒரு கம் பேக் கொடுத்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில், சுதீஷ் சங்கர் என்பவருடைய இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. விரைவில் நடிகர் வடிவேலுவிற்கு ‘கேங்கர்ஸ் மற்றும் மாரீசன்’ ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த “மாரீசன்” திரைப்படத்தில் ஏற்கனவே “மாமன்னன்” திரைப்படத்தில் வடிவேலுவுடன் நடித்து அசத்திய பிரபல மலையாள திரைப்பட நடிகர் பகத் பாசில் இணைந்து நடித்திருக்கிறார். இது ஒரு காமெடி கலந்த அட்வென்ச்சர் திரைப்படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த ஒரு திரைப்படத்திற்கு “மாரீசன்” என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது அந்த தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் பெற்றுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
நினைச்சது கிடைக்கலைன்னா, கிடைச்சது வெச்சு எப்போதும் அசத்துவார் நம்ம வடிவேலு. ரசிக்கலாம்.