மனோஜிடம் பணத்துக்காக டிராமா போட்டு உள்ளனர் ரோகினி மற்றும் வித்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ரூமுக்கு வந்து நீ ஏன் ஜீவா பத்தி பேசி என் மனதை கஷ்டப்படுத்துற அந்த மாதிரி ஒரு ஆள் என் வாழ்க்கையில் இல்லை என்று நினைச்சுகிட்டு இருக்கேன். ஆனா நீ இப்படி பேசினா மனசு கஷ்டமா இருக்கு என்று சொல்ல, ரோகினி சாரி மனோஜ் நான் என் பிரண்டு கிட்ட வாக்கு கொடுத்துட்டேன் அது கிடைக்கலன்றபோ கோவத்துல பேசிட்டேன் இனிமே இப்படி பேச மாட்ட என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் நான் ஒரு லட்சத்துக்கு மூன்று ரூபாய் வட்டி போட்டு கொடுக்கிறேன் என்று சொல்ல ரோகிணியும் வேறு வழி இல்லாமல் சம்மதித்து விடுகிறார்.
மீனா செல்வத்தை சந்தித்து ஆடம்பரமாக செய்வதை விட வீட்டில் நம்ம வசதிக்கு ஏற்றபடி செய்வது ரொம்ப நல்லது அண்ணா. நீங்க செய்யறத நான் வேணான்னு சொல்லல நம்மள மாதிரி ஆளுங்க எப்படி பண்ணா நல்லா இருக்கும் என்பதை உங்களுக்கு சொல்ற நீங்க தங்கச்சியா நினைக்கிறிங்க அந்த உரிமையில் தான் நான் சொல்றேன் கடன் வாங்கி வட்டி கற்ற கஷ்டம் நம்பள மாதிரி உழைச்சு வேலை செய்யறவங்களுக்கு தான் தெரியும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். செல்வம் மீனா இங்கு வந்ததை முத்துவிடம் சொல்ல வேண்டாம் என்று மற்றவர்களிடம் சொல்லுகிறார்.
ஷோரூமில் வந்து மனோஜிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கி கொள்கிறார் ரோகினி. உடனே வித்யா ரோகினியை கூப்பிட்டு அழ ஆரம்பிக்கிறார். என்னாச்சு எதுக்கு அழற என்று கேட்க எங்க அம்மாவை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்காங்க ரொம்ப நாளா வயிறு வலி என்று சொல்லிட்டு இருந்தாங்க இப்ப கட்டி இருக்கிறதாகவும் அது உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க ஆப்ரேஷனுக்கு 75 ஆயிரம் ஆகுமாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்கிட்ட காசு இல்ல நீ ஏதாச்சும் இருந்தா 75 ஆயிரம் கொடு நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று அழுது கொண்டே கேட்கிறார். உடனே மனோஜ் என்ன ஆச்சு என்று கேட்க அவங்க அம்மாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களா ஆப்ரேஷன் பண்ணனுமா என்று சொல்ல சரி நான் காசு கொடுக்கிறேன் அதே மாதிரியே 3 ரூபாய் வட்டி வாங்கிக்கோ அப்படின்னு சொல்ல சம்மதிக்கிறார் ரோகினி.
வெளியே வந்த வித்யா ரோகினி என இருவரும் டிராமா போட்டு மனோஜிடம் காசு வாங்குவதற்காக அப்படி நடித்திருக்கிறார்கள். ஒரு நாள் டிராமா புடவை கஷ்டமா இருக்கு இவ்ளோ நாளா டிராமா போட்டு ஏமாத்திக்கிட்டு இருக்க என்னால மட்டும்தான் முடியும் ரோகிணி என்று வித்யா சொல்லுகிறார். மறுபக்கம் காசு விஷயத்தில் முத்து மீனாவிற்கு இடையே ஏற்பட்ட சண்டையை செல்வத்திடம் சொல்ல என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லல என்று சொல்லுகிறார். என்னால அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வேணாம்.இப்ப என்னடா பண்ண போற என்று கேட்க நம்பள மாதிரி இருக்கிறவங்களுக்கு ஆசைப்பட மட்டும்தான் தகுதி இருக்கு ஆனா செய்ற தகுதி இல்ல ஃபங்ஷனை கேன்சல் பண்ண போறேன் என்று சொல்லுகிறார்.
உடனே முத்து அங்கு வர செல்வத்திடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்கிறார். செல்வம் அந்த பணத்தை வாங்குகிறாரா? அதற்கு முத்து என்ன சொல்லப் போகிறார்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.