எழில் வீட்டை விட்டு கிளம்ப குடும்பத்தினர் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.ஏற்கனவே ஈஸ்வரி மற்றும் பாக்யா கடிதத்தை படித்துவிட, செழியன் படிக்கிறார் அதில் எல்லாருமே அப்பா மாதிரி வரணும்னு சொல்லுவாங்க ஆனா உன் விஷயத்துல நான் அப்படி சொல்ல மாட்டேன் பேராண்டி, இந்த குடும்பத்தை நீ தான் பாத்துக்கணும் குடும்ப பாரத்தை உன் மேல சுமக்க சொல்றன்னு நினைக்காத ஜெனி ரொம்ப நல்ல பொண்ணு வெள்ளந்தியான மனசு உனக்கு ஒரு குழந்தை பிறந்த அப்புறம் நீ ஒரு பொறுப்பான பையனா மாறி இருக்க இப்படியே இரு என்று சொல்ல செழியன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கண்கலங்குகின்றனர்.
எழில் லெட்டரை படிக்க அதில், பேராண்டி எழிலு, நீ திடீர்னு வீட்டை விட்டு கிளம்பிட்டியேயா எனக்கு ஒரு கை உடைஞ்ச மாதிரி ஆயிடுச்சு இருந்தாலும் சரி பண்றது எல்லாருக்கும் வரும் தானே என்று சொல்லி இருக்கிறார். நிலா பாப்பா நிஜமாவே நிலா தான் பல சமயங்கள்ல நம்ம வீட்டுக்கு வெளிச்சத்தை கொடுத்து இருக்கா அமிர்தாவும் நல்ல பொண்ணு ,அந்த பொண்ணு வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் ஏன் வந்ததுன்னு தெரியல, நீ படம் பண்ணனும் எழில்,நீ பண்ண படத்த பார்க்கும்போது எனக்கு ஒரு சேர் போட்டு விடு நான் கைதட்டி உக்காந்து ரசிப்பேன் என்று சொல்ல ஏழில் கத்தி அழுகிறார்.
இனியா லெட்டர் படிக்க அதில், உன்ன இப்பதான் பிறந்து கையில வாங்கின மாதிரி இருக்கு இனியா. ஆனா 19 வயசு பொண்ணா வளர்ந்து நிற்கிறேன் நீ இந்த வீட்டை விட்டு உங்க அப்பா பின்னாடி போகும்போது நான் உன் கூட வந்தேன்ல என்று சொல்ல ஆமா தாத்தா வந்தீங்க என்று சொல்லி அழுகிறார். இந்த வயசுல எந்த எடுத்தலையோ மனச சிதற விடாம நம்மளோட வேலையை கரெக்டா செய்யணும். உன் அம்மாவ நீ அழ வைக்க கூடாது. நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் உன்னை பார்த்து எல்லாரும் கைதட்டி பாராட்டணும் இதுதான் என்னோட ஆசை என்று சொல்லுகிறார். நான் சொன்ன கதையை நிலா பாப்பாக்கு யாழினி பாப்பாக்கு நீ சொல்லி கொடு இனியா உனக்கு மழ நான் ரொம்ப புடிக்கும் இல்ல இனிமே நீ மழையில நனையும்போது என்ன நெனச்சுக்கோ என்று சொல்ல இனியா அழுகிறார். பாக்கியா இனியாவை கட்டிப்பிடித்துக் கொள்ள கதவுரத்தில் ராமமூர்த்தி இதையெல்லாம் பார்ப்பது போல தோன்றுகிறது.
மறுபக்கம் கோபி பாரில் ஃபுல்லாக குடித்துவிட்டு கத்த அனைவரும் டிஸ்டர்ப் ஆகின்றன. உடன் இருக்கும் அவர் நண்பர் ஏன்டா கோபி இப்படி பண்ற போதும் வீட்டுக்கு போலாம் வா என்று கூப்பிட இல்லை இன்னும் இரண்டு ரவுண்டு போகலாம் என்று சொல்ல பார் குளோசிங் டைம் ஆகிவிட்டது. அந்த நேரம் பார்த்து ராதிகாவின் போன் கால் வர இரண்டு முறை எடுக்காத கோபி மூன்றாவது முறையா அவரது நண்பர் எடுத்து பாரில் இருப்பதாகவும் கோபி அதிகமாக குடித்துவிட்டு எழுந்து வராமல் இருப்பதையும் சொல்லிவிட ராதிகா நான் அங்கே வருகிறேன் என்று சொல்லிவிட்டு நேரில் வந்து கோபியை கூட்டிக்கொண்டு செல்கின்றனர்.
உடனே எழில் அமிர்தாவிடம் வந்து சரி நம்ம கிளம்பலாம் என்று சொல்ல அமிர்தா இந்த நிலைமையில் நம்ம எப்படி சொல்லிட்டு போக முடியும் என்று சொல்ல வேற வழி இல்ல நம்மளுக்கு நிறைய வேலை இருக்கு போய் வீடு பாக்கணும் அது செட் ஆகல நான் இன்னொரு வீடு பார்க்கணும் நம்ம பேசிட்டு போகலாம் என்று சொல்ல அமிர்தா சரி என்று சம்மதிக்கிறார்.
வீட்டில் பாக்யாவிடம் சொன்னதும் பாட்டியிடம் சொல்லப் போகிறார், ஈஸ்வரி உடனே போய் தான் ஆகணுமா என்று சொல்ல தாத்தாவோட ஆசையை நிறைவேத்திட்டு கண்டிப்பா இந்த வீட்டுக்குள்ள வருவேன் என்னாலையோ உங்களால பிரிஞ்சிட்டு இருக்க முடியாது. சீக்கிரமா வந்துடுவேன் பாட்டு என்று சொல்ல ஈஸ்வரி அழுது கொண்டே அனுப்பி வைக்கிறார்.
எழில் பாக்யாவிடம் சொன்னது என்ன? எழிலிடம் செழியன் சொன்ன? விஷயம் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.