
‘விடாமுயற்சி’ கதைச்சுருக்கம் தெரிந்தாலும், கலெக்ஷன் ஏறுகிறது: ‘தல’ அஜித் ரசிகர்கள் உற்சாகம்
மகிழ்திருமேனி இயக்கத்தில், ‘தல’ அஜித் நடிப்பில் விடாமுயற்சி நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது.
இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படம் தொடர்பாக மகிழ்திருமேனி மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
வழக்கமாக படத்தை விளம்பரம் செய்பவர்கள் எங்கள் படம் வித்தியாசமாக இருக்கும், ஹீரோ கதாபாத்திரம் மாறுபட்டது. படம் தீயாக இருக்கும். தியேட்டர் அதிரப் போகிறது. டான்ஸ், பாட்டு, சண்டை, காதல், பாசம் என அனைத்தும் எங்கள் படத்தில் இருக்கிறது என்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி கொஞ்சம் வித்தியாசமாக, அதாவது படத்தில் என்னென்னவெல்லாம் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிட்டார்.
இது பெரிய மாஸ் சப்ஜெக்ட் படம் என நினைத்து வர வேண்டாம். இது சூப்பர் ஹீரோ படம் இல்லை. சாதாரண மனிதன் தன் வாழ்க்கையில் ஏற்படும் சூழலால், ஹீரோ ஆவதை தான் படத்தில் காட்டியிருக்கிறோம்.
விடாமுயற்சி படத்தின் கதை என்னுடையது இல்லை. அஜித் சார் தேர்வு செய்து சொன்ன கதையை படமாக்கி இருக்கிறேன். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்கு வரவும்’ என கூறியுள்ளார்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு செல்லும் போது, கதை நிச்சயம் பிடிக்கும். அது தான் விடாமுயற்சிக்கு நடக்கிறது. அஜித் குமார் படத்தின் கதைச் சுருக்கம் ஏற்கனவே அனைவருக்கும் தெரியும். ட்ரிப் போகும் இடத்தில் மனைவி காணாமல் போக அவரை தேடி அலைகிறார் ஹீரோ.
அந்த நேரத்தில் அவருக்கு தலைவலியாக இருக்கிறார் வில்லன். இதை தாண்டி மனைவியை கண்டுபிடித்தாரா ஹீரோ என்பதே கதை ஆகும்.
கதைச் சுருக்கம் தெரிந்தாலும் கூட 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ‘தல’ படத்தை காண ரசிகர்கள் ஆவலாய் இருக்கிறார்கள் ரசிகர்கள். இது படத்திற்கு பெரிய பலம் என்பதற்கு கலெக்ஷனே சாட்சி.!