vettaiyan movie triler released
vettaiyan movie triler released

வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அக்டோபர் 10-ம் தேதி வெளியாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாஸில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படத்தின் டிரைலரை பட குழு என்று வெளியிட்டு உள்ளது.

அதில் ஒவ்வொரு நடிகரும் மிரட்டலான டயலாக்குகளும், வசனங்களும் பேசியுள்ளது ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடி ஆக்ஷன்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.