இந்த ஆண்டு வெளியாகி டாப் 5 இடத்தை பிடித்த ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்த வருடம் தொடக்கத்திலிருந்து படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் முன்னணி பிரபலங்கள் நடித்த படங்களும் இடம்பெறுவது வழக்கம்.
அந்த வகையில் படம் வெளியான முதல் நாளிலேயே அதிகம் வசூல் பெற்ற ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
முதலிடத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான “கல்கி 2898 AD”. பிரம்மாண்டமாக உருவான இந்த படம் முதல் நாளில் 182 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவதாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான “தேவாரா” இந்த படம் முதல் நாளில் 172 கோடியை வசூல் செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மூன்றாவது இடத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட். ஐந்தாயிரம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் முதல் நாளில் 101 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
நான்காவதாக திகில் திரைப்படமாக வெளியான “ஸ்ட்ரீ 2″என்ற இந்த படம் முதல் நாளில் 80 கோடியை வசூல் செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
ஐந்தாவதாக மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘குண்டூர் காரம்” திரைப்படம் 73.2 கோடியை வசூல் செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது? என்று எங்களோடு கமெண்டில் சொல்லுங்க.