கோபி வில்லத்தனமாக பேச, பாக்யா ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியாவை காலேஜில் விடுமாறு கேட்க அதற்கு செழியன் நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க பாட்டி அவ பாட்டுன்னு காலேஜ் பஸ்ல போயிட்டு இருந்தா நீங்களும் தாத்தாவும் ஆட்டோல கொண்டு போய் விடுறேன்னு சொன்னீங்க. இப்போ உங்களால முடியலன்னு சொன்ன உடனே என்ன செய்ய சொல்றீங்க. எனக்கு ஆபீஸ்ல வேலை இருக்கு அங்க இருந்து பர்மிஷன் கேட்டுகிட்டு வந்து அவளை கூட்டிட்டு வர முடியுமா என்று கேட்கிறார். உங்களால் முடியவில்லை என்று சொன்னவுடன் என்கிட்ட சொல்றீங்க என்னால எல்லாம் முடியாது என்று கோபமாக பேசுகிறார். இதனால் ஈஸ்வரி வருத்தப்பட்டு உள்ளே சென்று விடுகிறார்.
ஜெனி, செழியன் இடம் நீ பண்றது ரொம்ப தப்பு, ஆபீஸ்ல இருக்கிற கோவத்தை என் வீட்ல இருக்கிறவங்க மேல காட்டிட்டு இருக்கேன் உன்ன மட்டும் புரிஞ்சுக்கலன்னு சொல்றியே அவங்களை நீ புரிஞ்சுக்கிறியா என்று திட்டி விட்டு ஈஸ்வரியின் ரூமுக்கு வருகிறார். ஈஸ்வரி இடம் பாட்டி செழியன் பேசினது தப்புதான் மன்னிச்சுடுங்க அவன் ஆபீஸ் டென்ஷன்ல அப்படி பேசிட்டான் என்று மீண்டும் மன்னிப்பு கேட்கிறார். அவன் பேசினதுக்கு நீ என்னம்மா பண்ணுவ என்று சொல்லிக் கொண்டிருக்க குழந்தை அழும் சத்தம் கேட்டு ஈஸ்வரி ஜெனியை அனுப்பி வைக்கிறார். மறுபடியும் ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஜெனி கிளம்புகிறார். கிச்சனில் காய்கறிகளின் வெட்டிக் கொண்டிருந்த ஜெனி அப்போது பாக்கியா வருகிறார்.
பாக்யா வந்தவுடன் வீட்டில் நடந்த பிரச்சனைகளை பாக்கியாவிடம் ஜெனி சொல்ல பாக்யா ஈஸ்வரி ரூமுக்கு செல்லுகிறார். ஈஸ்வரி பாக்யாவிடம் என்ன பாக்யா ரெஸ்டாரண்ட்ல வேலை எப்படி போகுது புதுசா வந்த செஃப் எப்படி வேலை பார்க்கிறார்கள் என்றெல்லாம் பேச ரெஸ்டாரன்ட் கதையை விடுங்க அத்தை வீட்ல என்ன நடந்துச்சு என்று சொல்ல, அவரு இருக்கிற வரைக்கும் எனக்கு எல்லாமே கிடைச்சது அவரு போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எனக்கு எந்த மரியாதையும் கிடைக்காதுன்னு என்று பாக்கியாவை கட்டிப்பிடித்து அழுகிறார்.
பாக்யா செழியன் ஏதோ சின்ன பையன் மன்னிச்சிடுங்க அத்தை என்று சொல்ல செழியன் மட்டுமே சொன்னா என்று ஆரம்பிக்க பாக்யா உடனே வேற யார் அத்தை சொன்னாங்க என்று கோபமாக கேட்கிறார். அப்படியெல்லாம் இல்லை இதுக்கு மேலயும் மரியாதை இல்லாம தான் பேசுவாங்க என்று சொல்லி சமாளிக்கிறார் ஈஸ்வரி.
பாக்கியா ஈஸ்வரிக்கு ஆறுதல் கூறி வாங்க வெளியே போலாம் இன்னிக்கு ரெஸ்டாரன்ட் நடந்த விஷயம் எல்லாம் உங்ககிட்ட பேசிக்கிட்டே நான் சமைக்கிறேன் என்று சொல்லுகிறார். செழியன் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஜெனி வந்து திரும்பவும் அதைப்பற்றி பேச கொஞ்சம் வேலை பார்க்க விடு ஜெனி, என்று பேசிவிட்டு நான் வெளியே போய் வேலை பார்க்கிறேன் என்று கதவை திறக்க பாக்கியா நிற்கிறார்.
செழியனிடம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வா செழியா என்று கூப்பிடுகிறார். உனக்கு என்ன பிரச்சனை சரியா இருக்கு பாத்துக்கிட்டு இப்படி பேசுற அவங்க ஏற்கனவே ஒரு பெரிய இழப்புல இருந்து வந்திருக்காங்க அவங்களுக்கு நம்ம மேல எந்த கஷ்டத்தையும் கொடுக்கக் கூடாது ஆறுதலா தான் இருக்கணும் இந்த ஒரு வாரத்துல நீ ரெண்டு வாட்டி பாட்டி கிட்ட கோபமா பேசி இருக்க அது அவங்கள எவ்வளவு பாதிக்கும் என்று பேசுகிறார். இனியா விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் நீங்க எதுவும் கவலைப்படாத இந்த வீட்டு பாரத்தை உன்மேல வைக்கிறார்கள் நினைக்காத என்றெல்லாம் பேச எனக்கு புரியுதும்மா நான் அதை நினைச்சு வருத்தப்பட்ட நானே கூட இனிமையாக டிராப் பண்ற என்று சொல்ல பாக்யா வேண்டாம் செய்ய நீ உன் வேலையை பாரு நான் பாத்துக்குறேன் ஆபீஸ்ல இருக்குற டென்ஷனை கம்மி பண்ணு என்றெல்லாம் அட்வைஸ் கொடுக்கிறார். சரிம்மா இதுக்கு அப்புறம் இது எதுவும் பண்ண மாட்டேன் சாரி என்று சொல்லிட்டு வேலையை பார்க்கிறார்.
கோபி, நண்பர் செந்தில் உடன் காபி குடித்துக் கொண்டிருக்க காபி செம டேஸ்டா இருக்கு இல்ல செந்தில் என்று சொல்ல, நல்லா இருக்கு என்று சொல்லுகிறார். இந்நேதிக்கு குடிச்சுக்கிட்டு இருப்போம் இப்போ காபி குடிச்சுட்டு இவ்ளோ பேசுற என்று சொல்ல நீ வேணா ஒன்னு ரெண்டு ஓட விட்டுடுவ நானே தலைகீழா வீட்டுக்கு நடந்து போற அளவுக்கு குடிச்சிகிட்டு இருந்தேன் அதுவும் இல்லாம இப்போ என் மாமியார் வேற வந்திருக்காங்க அவங்க வந்தாலே ஏதாவது பிரச்சனை தான் வரும்.
இப்பதான் ராதிகா என் கிட்ட பேசிகிட்டு இருக்கா குடிச்சிட்டு போனா ஒன்னுக்கு ரெண்டா சொல்லி ராதிகாவுக்கு கீ குடுத்துட்டா அவர் சும்மாலே ஆடுவா அப்புறம் நான் ஹால்ல தான் படுக்கணும் என்றெல்லாம் பேசுகிறார்.
அந்த நேரம் பார்த்து பாக்யா ரெஸ்டாரன்ட் இருக்கு அனுப்பிய செஃப் கோபியை பார்க்க வருகிறார். அங்கு நடந்த விஷயங்கள் பற்றி கோபி கேட்க மெனுவ எல்லாம் நிறைய வச்சிருக்காங்க டிஃபரண்ட் டிஃபரண்டா மாத்துறாங்க, எல்லாம் ஃபுட்லயும் ஒரு ஹோம்லி டச்சு இருக்கு என்றெல்லாம் பாராட்டி பேச கோபி சரி சரி அதை விடு ஏதாவது பிளான் பண்ணியா என்று கேட்க ஒரு லிஸ்ட் எடுக்க சொன்னாங்க நானும் எடுத்துக் கொடுத்தேன் மாட்டு வாங்கன்னு பார்த்தா ஒரு ஒரு பொருளையும் பத்து தடவை கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திட்டு பார்க்கிறாங்க. எனக்கு தெரிஞ்சவன் செகனண்ட் மளிகை பொருட்கள் விக்கிறான் அவன்கிட்ட வாங்கிவிடலாம் என்று பார்த்தால் அதுக்கும் வேணான்னு சொல்லிட்டாங்க உஷாரா இருக்காங்க என்று சொல்ல செந்தில் எதுக்குடா இப்படி பண்ணனும் என்று கேட்கிறார்.
உடனே கோபி அவ ரெஸ்டாரன்ட் மூடனும் நடுத்தெருவுல நிக்கணும் திரும்பவும் கிச்சனுக்குள்ள அடங்கி இருக்கணும் என்றெல்லாம் வில்லத்தனமாக பேச செஃப் என்ன சார் வில்லனாகவே மாறிட்டீங்க என்று கேட்கிறார். நான் நல்லவனாக இருந்த இவ தான் இப்படி மாத்திட்டா என்று சொல்லுகிறார்.
செந்தில் இதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்க இவை இங்க இருந்தா டிஸ்டர்ப் பண்ணுவான் நீங்க வாங்க நம்ம ரெஸ்டாரன்ட் எப்படி காலி பண்றதுன்னு தனியா போய் பிளான் பண்ணுவோம் என்று செப்பை கூட்டிக்கொண்டு தனியாக செல்லுகிறார்.
பாக்யா ஈஸ்வரி இடம் என்ன பேசுகிறார்? அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.