முத்தழகு சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று முத்தழகு. விவசாயம் செய்து வரும் ஒரு பெண்ணின் கதை எனத் தொடங்கிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரியல் தொடங்கி நான்கு வருடங்கள் கடந்த நிலையில் தற்போது முடிவுக்கு வரவுள்ளது. முத்தழகு ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறக்க தற்போது அவருக்கு எல்லாம் நினைவுகளும் திரும்ப வந்துவிடுகிறது.
அஞ்சலி குழந்தையை ஏமாற்றிய விஷயம், மீனாட்சி தான் தன் குழந்தை என்று முத்தழகு அறிந்து கொள்கிறார். ரெஜினாவையும் போலீஸ் கைது செய்து போக, குழந்தையை தூக்கிச்சென்ற அஞ்சலியை தேடி பூமிநாதனும் முத்தழகும் வருகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அஞ்சலியின் அம்மா ரெஜினா கோர்ட்டில் இருக்கும் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை அஞ்சலி வெளியிட்டு Last Day Shoot as Anjali என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் முத்தழகு சீரியல் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.