வேட்டையன் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். த.செ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க அமிதாப்பச்சன் ,பகத் பாஸில், ராண டகுபதி ,மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக பட குழு இந்த படத்தின் டிரைலரை அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.