ஆட்டம் பாட்டத்துடன் நடந்த வசந்த்,வைஷு சங்கீத் பங்க்ஷன்.. வீடியோ இதோ.!!
வசந்த் மற்றும் வைஷுவின் சங்கீத் பங்க்ஷன் நடந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஹீரோவாக முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த்.
அதே தொலைக்காட்சியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் வைஷு சுந்தர். சமீபத்தில் இவர்கள் காதலை அறிவித்து உடனே நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர்.
அதன் பிறகு திருமண தேதி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு முன் நடக்கும் சங்கீத் பங்க்ஷன் கோலாகலமாக நடந்துள்ளது ஆட்டம் பாட்டத்துடன் சீரியல் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram