வீர தீர சூரனா, எம்புரானா, சிக்கந்தரா?: கலெக்ஷனில் கலக்கப் போவது யாரு?
இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் பற்றிப் பார்ப்போம்..
* அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் இரண்டு பாகங்கள் ஆகும். இதில், 2-ம் பாகம் முதலில் வெளியிடப்பட உள்ளது.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படம் நாளை மறுநாள் ( 27-ந் தேதி) திரைக்கு வருகிறது.
* தமிழ்நாட்டில் வருகிற 27-ந்தேதி ரிலீஸாக உள்ள மற்றொரு பான் இந்தியா படம் எம்புரான். இப்படத்தை பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ‘லூசிபர்’ படத்தின் 2-பாகம் ஆகும். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் ‘வீர தீர சூரன்’ படத்துக்கு நிகரான தியேட்டர்கள் ‘எம்புரான்’ படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழில் தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் பாவனா. இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் நடித்துள்ள திரைப்படம் ‘தி டோர்’. இப்படத்தை ஜெய் தேவ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நவீன் ராஜன் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 27-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது.
* ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சிக்கந்தர்’ படமும் இந்த வாரம் ரிலீஸாகிறது. சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி வெளியாகிறது. பார்க்கலாம்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை இதில், எந்த படமென.!