Vanitha About 28 Years of Ajithism
Vanitha About 28 Years of Ajithism

அஜித்தின் 28 வருட திரையுலக பயணம் குறித்து வனிதா ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Vanitha About 28 Years of Ajithism : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமே என் வேலை என இருந்து வந்தாலும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க எச் வினோத் இயக்கி வருகிறார்.

தல அஜித் தமிழ் சினிமாவில் நுழைந்து 28 வருடங்கள் ஆகி விட்டன. அஜித்தின் 28 வருட திரையுலக பயணத்தை கொண்டாடும் விதமாக காமன் டிபி புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

நீ ஒருத்தன் போதும் டா.. மாஸ்டர் பட டிரெய்லர் குறித்து கனகராஜ் பதிவிட்ட ட்வீட்.!

தமிழ் சினிமாவைச் சேர்ந்த 16 பிரபலங்கள் இந்த காமன் டிபி புகைப்படத்தை நேற்று வெளியிட்டனர். இதுகுறித்து நடிகை வனிதாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் நம்பமுடியாத ஆனால் உண்மை. நாம் அனைவரும் ஒன்றாக தொழில்துறையில் நுழைந்தோம்.

நான் வாழ்க்கையின் சிறந்த மற்றும் மோசமான அனுபவத்தையும் கண்டேன். உங்கள் வெற்றி ஒவ்வொன்றிற்கும் நீங்கள் தகுதியானவர், நான் இதுவரை சந்தித்த மிக உண்மையான, எளிமையான, தாழ்மையான மனிதர்களில் ஒருவர். உங்களையும் ஷாலுவையும் ஆசீர்வதிப்பார் என கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த பதிவிற்கு ரசிகர்களின் சில கமெண்ட்ஸ்

https://twitter.com/Thala_Fanaticc/status/1287371593870704640?s=19
https://twitter.com/suchi_leake/status/1287371053753176064?s=19