vadivelu upcoming movie update
vadivelu upcoming movie update

அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க உள்ளார் வடிவேலு.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் வடிவேலு. இவர் காமெடிக்கு சிரிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. பல மீம்ஸ்களுக்கு இவருடைய டயலாக்கையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மாமன்னன் படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மாரீசன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்தப் படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். முக்கியமாக சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார்.

சுந்தர் சி மற்றும் வடிவேலு இணையும் காம்போ மிகவும் ரசிக்கக்கூடியவையாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.