மகா சங்கமத்தில் இணையப் போகும் இரண்டு சன் டிவி சீரியல்கள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!!
மகா சங்கமத்தில் இரண்டு சன் டிவி சீரியல்கள் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக வாராவாரம் வெளியாகும் டிஆர்பி இல் முதல் மூன்று இடங்களை சன் டிவி சீரியல்களே தொடர்ந்து பிடித்து வருகிறது.
சில நேரங்களில் சீரியல்களில் மகா சங்கமம் என்று இரண்டு சீரியல்களை ஒன்றாக சேர்ந்து ஒளிபரப்பு செய்து வருவது வழக்கம். இந்த வகையில் மூன்று முடிச்சு சீரியலும் மருமகள் சீரியலும் மகா சங்கமம் மூலம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு சீரியல்களுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடனும் பரபரப்பான திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
