எங்கே செல்கிறேன்?: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..

Web Ads

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டாலும், போஸ்ட் போட்டாலும் அது வைரலாகி விடுகிறது. அவ்வகையில் திரிஷா ‘தான் விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து, எங்கே செல்கிறேன்?’ என கேட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸை நிரப்பிவிட்டார்கள்.

எங்கே போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டுவிட்டு, துபாயில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்திருக்கலாம். இல்லை, வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு செல்லலாம்.

அது எல்லாம் இருக்கட்டும் திரிஷா, இந்த போட்டோவை எடுத்தது யாரென்று சொல்லுங்கள். அதை தெரிந்து கொள்ளத் தான் ஆவலாக இருக்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.

திரிஷா அவ்வப்போது தன் தோழிகளுடன் வெகேஷனுக்கு வெளிநாட்டிற்கு செல்வார். அவர்களை சந்தித்து நேரம் செலவிடுவார். இந்நிலையில் தான் இந்த சோலோ போட்டோவை எடுத்த தோழி யாரென்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.

திரிஷா நடிக்க வந்து 25 ஆண்டுகளாகி விட்டது. இந்நிலையில், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழாவில் அவருக்கு சிறப்பு விருது கொடுத்து கவுரவித்தார்கள். விருதை பெற்றுக் கொண்ட த்ரிஷாவிடம் சில திரையுலக பிரபலங்களின் புகைப்படங்களை காட்டி கேள்வி கேட்க அவரும் பதில் அளித்தார்.

trisha instagram post asking where to goes viral
trisha instagram post asking where to goes viral