Top Tamil Directors Acting Details
Top Tamil Directors Acting Details

தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளனர். அது குறித்து பார்க்கலாம் வாங்க

Top Tamil Directors Acting Details : தமிழ் சினிமாவின் இன்று முன்னணி இயக்குனர்கள் ஆக ஷங்கர், முருகதாஸ், கே வி ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் உள்ளனர்.

இவர்கள் இயக்குனர் ஆவதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் வெளியான மற்ற இயக்குனர்களின் படங்களில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளனர். அதிலும் சில இயக்குனர்கள் நடித்துள்ள வேலன் நம்மை வியக்க வைக்கிறது.

சங்கர் :

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் பிரமாண்ட படங்களை கொடுக்கும் சங்கர் 1990 ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சீதா என்ற படத்தில் ஜப்பான் என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குழந்தை வண்டியில் ஏறுமா அய்யா கொண்டு போய் வீட்டில் விட்டுடுவாரு என்று சங்கர் பேசும் டயலாக் எல்லாம் வேற லெவல்.

எஸ் ஜே சூர்யா :

1988 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான நெத்தியடி என்ற படத்தில் எஸ் ஜே சூர்யா ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

OTT-ல் ஜகமே தந்திரம் ரிலீஸ்?? இத்தனை கோடிக்கு தான் விலை பேசியதா அமேசான்?? – தயாரிப்பாளரின் முடிவு என்ன?

ஏ ஆர் முருகதாஸ் :

1997 ஆம் ஆண்டு அப்பாஸ், சிம்ரன் நடிப்பில் வெளியான பூச்சூடவா என்ற படத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடித்துள்ளார். மேலும் இவர் கத்தி, சர்க்கார் உள்ளிட்ட படங்களிலும் சிறு வேடத்தில் தலை காட்டி இருப்பார்.

கே வி ஆனந்த் :

பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1992ல் விக்ரம் நடிப்பில் வெளியான மீரா என்ற படத்தில் இயக்குநர் கே வி ஆனந்த் விக்ரமின் வில்லனாக நடித்துள்ளார்.

கே.எஸ் ரவிக்குமார் :

இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான புது வசந்தம் என்ற படத்தில் கே எஸ் ரவிக்குமார் ஒரு காட்சியில் வாட்ச்மேனாக நடித்துள்ளார். இவர் தற்போது முழுநேர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

சுந்தர் சி :

மணிவண்ணன் இயக்கத்தில் 1990ல் வெளியான வாழ்க்கைச் சக்கரம் என்ற படத்தின் சுந்தர் சி போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார்.

பேரரசு :

இயக்குனர் தரணி இயக்கத்தில் 1999ல் மம்முட்டி நடிப்பில் வெளியான எதிரும் புதிரும் என்ற படத்தில் இயக்குனர் பேரரசு காட்சி ஒன்றில் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார்.

அட்லி :

ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நண்பன் படத்தில் ஒரு பாடலில் இயக்குனர் அட்லி கிளாப் போர்டுடன் ஒரு காட்சியில் நடித்துள்ளார். இவர் ஷங்கரின் உதவி இயக்குனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

விக்னேஷ் சிவன் :

கடந்த 2007ஆம் ஆண்டு புதுமுகங்கள் நடிப்பில் வெளியான சிவி என்ற படத்தில் ஹீரோவின் நண்பனாக விக்னேஷ் சிவன் நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா :

2001 ஆம் ஆண்டு வடிவேலு, பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில் வெளியான இதயத்தை திருடி விட்டாய் என்ற படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தும் காட்சியில் நடித்துள்ளார்.

சுசீந்திரன் :

லிங்குசாமி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் பாவனா நடிப்பில் வெளியான தீபாவளி என்ற படத்தில் இயக்குனர் சுசீந்திரன் போகாதே என்ற பாடலில் ஜெயம் ரவியிடம் அடிவாங்கும் ஒருவராக நடித்துள்ளார்.

சமுத்திரக்கனி :

இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பார்த்தாலே பரவசம் என்ற படத்தில் விவேக் உடனான காட்சி ஒன்றில் இயக்குனர் சமுத்திரகனி நடித்துள்ளார். இதுதான் இவர் நடித்த முதல் திரைப்படம்.

பார்த்திபன் :

இன்று பல்வேறு படங்களில் நடித்து வரும் பார்த்திபன் முதல் முறையாக ரஜினிகாந்த், சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் :

ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு என்ற படத்தில் கூட்டத்தில் நிற்கும் ஒருவராக கௌதம் மேனன் நடித்துள்ளார்.

பா ரஞ்சித் :

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சி ஒன்றில் இயக்குனர் பா ரஞ்சித் நடித்துள்ளார்.

மிஸ்கின் :

கடந்த 2004 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான யூத் திரைப்படத்தில் பாடல் காட்சி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் மொட்டைத் தலையுடன் நடித்துள்ளார்.

OMG.. விஜய்க்கு ஹிட் கொடுத்த குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தளபதி நடிக்க அஜித் தான் காரணம் – இதை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

மாரி செல்வராஜ் :

பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய குருநாதரான இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார்.

நலன் குமார் :

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான பீட்சா படத்தில் விஜய் சேதுபதியுடனான சில காட்சிகளில் இயக்குனர் நலன் குமார் நடித்துள்ளார்.

சுதா கொங்கரா :

சூர்யாவை வைத்து தற்போது சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கி உள்ள சுதா கொங்கரா கண்ட நாள் முதல் படத்தில் ஹீரோயின் லைலாவின் தோழியாக நடித்து உள்ளார்.

வெற்றி மாறன் :

2002-ம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடித்துள்ளார்.