Unrevealed Secret of Kushi
Unrevealed Secret of Kushi

தளபதி விஜய்க்கு ஹிட் கொடுத்த குஷி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது பற்றிய தகவல் தெரிய வந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Unrevealed Secret of Kushi : தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் ஒரு கதையை ஒரு ஹீரோவை மனதில் வைத்து எழுதி அதன் பின்னர் அந்த ஹீரோவை வைத்து படம் எடுக்க முடியாமல் வேறு ஒரு ஹீரோவுக்கு கை மாறுவது என்பது சகஜமான ஒன்று.

அஜித், விஜய் என பல நடிகர்கள் நடிக்க வேண்டிய படங்கள் அவர்களால் நடிக்க முடியாமல் இப்படி வேறொரு நடிகர்களுக்கு கைமாறியது உண்டு.

அப்படித்தான் எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி படத்தின் பின்னரும் பெரிய கதை உள்ளது. ஆம் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லையாம்.

எஸ் ஜே சூர்யாவிற்கு இது இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக அவர் வாலி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் வாலி படத்தை இயக்குவதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆகியுள்ளது. அப்போது வாலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராசி என்ற படத்தை தயாரித்து வந்துள்ளது.

அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாததால் உடனே வாலி படத்தை கையில் எடுக்க முடியவில்லை.

இந்த சமயத்தில்தான் எஸ் ஜே சூர்யா குஷி படத்தின் கதையை பாரதிராஜாவின் மகன் மனோஜ்க்கு கூறியுள்ளார்.

விஜய்யின் அந்தப் படத்தில் நான் நடித்திருக்கணும் மிஸ் பண்ணிட்டேன்.. இயக்குனரிடம் வருத்தப்பட்ட அஜித் – அது என்ன படம் தெரியுமா?

பாரதிராஜா தன்னுடைய மனோஜ் புரோடக்சன் நிறுவனத்தில் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். உடனே படத்தை தொடங்குமாறு எஸ்.ஜே சூர்யாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் எஸ் ஜே சூர்யா தனக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்தின் வாலி படத்தை முடித்து கொடுக்காமல் இந்த படத்தை இயக்க மாட்டேன் என பாரதிராஜாவுக்கு டச்சிங்காக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் பாரதிராஜா தன் மகனை வைத்து தாஜ் மஹால் என்ற படத்தை இயக்க தொடங்கிவிட்டார். எஸ் ஜே சூர்யா வாலு படத்தை இயக்கி முடித்து விட்டு விஜய்யிடம் குஷி படத்தின் கதையை கூறி அதையும் ஹிட் படமாகக் கொடுத்து விட்டார்.

அன்று அஜித்தின் வாலி படத்தை தொடங்குவதற்கு குஷி படத்தை முடித்துவிடலாம் என எஸ் ஜே சூர்யா முடிவெடுத்திருந்தால் இந்த படத்தில் விஜய் நடித்திருக்க முடியாது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.