திருமணம் பற்றி, கமல்-சிம்பு பேச்சு வைரல்; திரிஷா வெயிட்டிங்

Web Ads

‘அன்பும் அறனும்’ என இல்லறம் குறித்த குறளும் உண்டு. அதாவது, இருமனம் ஒருமனம் ஆகும் நறுமண நிகழ்வு தானே திருமணம். அவ்வகையில், திருமணம் குறித்து சில பிரபலங்கள் தெரிவித்த வாசகங்கள் காண்போம்..

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், திருமண வாழ்க்கை குறித்தும் பேசினார்.

அதாவது, நான் ராமர் வழி அல்ல; அவரது அப்பா தசரதன் வழி. அதனால், இன்னும் சொச்சம் ஆயிரமாயிரம்’ என்றார். இது சரியான கருத்தா? ஜாலியான பேச்சா? என்றெல்லாம் இணையவாசிகள் கேட்டு வருகின்றனர்

இந்நிலையில், தக் லைஃப் படத்தில் முதன்முறையாக கமலுடன் சிம்பு இணைந்து நடிப்பதால், ரசிகர்களிடையே இப்படம் பார்க்கும் ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி ரிலீஸாகவிருக்கிறது. இச்சூழலில், திருமண வாழ்க்கை பற்றி சிம்பு தெரிவிக்கையில்,

‘திருமணம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால், திருமணம் ஆன பிறகு ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மை இல்லாததுதான் பிரச்சினை.

நான்தான், எனது வாழ்க்கைதான், நீ இல்லை என்றால் இன்னொருத்தர், நீ இல்லையென்றால் இன்னொருத்தி என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.

ஒருவர் இல்லையென்றால் இன்னொருவர் வாழ்க்கையில் வந்து கொண்டுதான் இருப்பார். அதனால், இருப்பவர்களை விட்டுட்டு போகக்கூடாது. எனவே, திருமணம் ஒரு பிரச்சினை இல்லை. நமக்கான சரியான ஒருவர் வரும்போது திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்’ என்றார்.

இது குறித்து நெட்டிசன்ஸ், ‘திருமணம் பற்றி கமல், சிம்பு போன்றோர் ஆகச்சிறந்த கருத்து சொல்லி விட்டார்கள். அப்படியே திரிஷாவும் திருவாய் திறந்து சொன்னாங்கன்னா, பொதுஜனம் கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும்’ என்பதும் வைரலாகி தெறிக்கிறது.

thug life movie function kamal and simbu marriage speech