இந்த மாதம் வெளியாகும் மூன்று தமிழ் படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.
இந்த மாதம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியானாலே ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருப்பது வழக்கம். அதிலும் ஒரு சில படங்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.அந்த வகையில் இந்த மாதம் வெளியாகபோகும் மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
அஜித் குமார் நடிப்பிலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் உருவாகி உள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நயன்தாரா மற்றும் மாதவன் சித்தார்த் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் நேரடியாக வரும் நான்காம் தேதி netflix ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் என்ற திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த மூன்று திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்கள் எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
