தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு..!

தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Do you know when the first single from the movie Thug Life will be released
Do you know when the first single from the movie Thug Life will be released

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று பட குழு அறிவித்து இருந்தது. ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த படத்தில் முதல் பாடல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது இன்னும் படம் வெளியாக 65 நாட்களில் இருக்கும் நிலையில் கமல்ஹாசன் சிறுவயது முதல் தற்போது வரை உள்ள புகைப்படங்களை வீடியோ மூலம் வெளியிட்டு ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியாகும் என்ற தகவலை பகிர்ந்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.