இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் இதோ..!
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். வாரா வாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.
தொடர்ந்து எப்பொழுதும் போல் முதலிடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. எழில் மற்றும் கயல் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் எழிலின் அம்மா என்ன செய்யப் போகிறார் என்ற கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது.
இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது. சூர்யா நந்தினி கழுத்தில் தாலி கட்டிய பிறகு, சுந்தரவல்லி வெறுப்பேற்றும் விதமாக சூர்யா நடந்து கொள்வதும் நந்தினி அந்த வீட்டில் எப்படி சகித்துக் கொண்டு வாழப் போகிறார் என்ற கோணத்தில் நகர்கிறது.
மூன்றாவது இடத்தில் சிங்க பெண்ணே சீரியலும், நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும் உள்ளது. சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்திலும், ஆறாவது இடத்தில் ராமாயணம் சீரியலும், ஏழாவது இடத்தில் மல்லி சீரியலும் உள்ளது.
தொடர்ந்து ஏழு இடத்தைப் சன் டிவி சீரியல் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது. மேலும் ஒன்பதாவது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் பிடித்துள்ளது. வழக்கம்போல் பத்தாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பிடித்துள்ளது.
அடுத்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம். இதில் உங்களுடைய ஃபேவரிட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்..